19 ஆவது நாளாகத் தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான

32

உலகத் தமிழர்களின் ஒருமித்த குரலாக சர்வதேசத்திடம் நீதிகேட்கும் “நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம்” நேற்று 600 கி.மீ தூரத்தைக் கடந்துள்ளது.

 

கடந்த மாதம் 28 ஆம் திகதி லண்டனிலிருந்து ஆரம்பமான இந்த மனிதநேய நடைபயணம் 18 ஆவது நாளான நேற்று 600 கி,மீ தூரத்தை கடந்து பிரான்ஸ் நாட்டின் Ravières எனும் நகரை சென்றடைந்துள்ளது.நேற்று காலை Tonnerre எனும் பகுதியில் இருந்து 10:15 மணிக்கு ஆரம்பமான இந்த நடைபயணம் 25.9கிலோமீற்றர் தூரத்தை கடந்து Ravières எனும் இடத்தை மாலை 6:45 மணிக்கு சென்றடைந்து, இன்று அங்கிருந்து தொடர்கிறது.

உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் அனைவரது சார்பிலும் தமிழ்ர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு நீதிகேட்டும், தாயகத்தில் தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத்தரும்படியும் கோரி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் முதன்நாளான எதிர்வரும் 27.02.2012 திங்கட்கிழமை அன்று ஜெனீவா சென்றடையவுள்ளது.

அன்றைய தினம் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கியனாடுகள் சபை முன்றலில் “ஈகப்பேரொளி” முருகதாசன் தீக்குளித்து நீதிகேட்ட அதே திடலில் மாபெரும் மக்கள் ஒன்றுகூடலும் இடம்பெறவுள்ளதால் அன்றைய தினம் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் அனைவரையும் அங்கு ஒன்றுகூடுமாறும் நடைபயணம் மேற்கொண்டுள்ள சிவச்சந்திரன், மற்றும் ஜெயசங்கர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


முந்தைய செய்திவான்கரும்புலிகள் கேணல் ரூபன்,கேணல் சிரித்திரன் அவர்களின் 3ம் நினைவு!
அடுத்த செய்திஎன் இனத்தை அழித்த காங்கிரஸை எல்லா மாநிலங்களிலும் அழிக்கப்பாடுபடுவேன்: மும்பையில் சீமான் பேச்சு