வல்வெட்டித்துறை மக்கள் தமிழ்தேசியகூட்டமைப்பில் மிகுந்த கோபத்தில் உள்ளனர்’ -வல்வை நகரசபைதலைவர்
ஜெனீவாவில் நடைபெறும் மனிதஉரிமைகள்கூட்டத்தொடரில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது
என்ற சம்பந்தரின் அறிவிப்புக்கு தனது எதிர்ப்பையும் வருத்ததையும் வல்வெட்டித்துறை நகரசபைதலைவர்
திரு.ந.அனந்தராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
27.02.2012 அன்று வெளியான தினக்குரல் நாளிதழில் வந்த அவரின் அறிக்கை .
ஒட்டுமொத்த தமிழ்மக்களுடைய எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கியுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜெனீவா அமர்வுகளில் கலந்துகொள்ளாது என்ற அறிக்கை மக்கள் மத்தியில் நேரடிதொடர்பினை கொண்டிருக்கும் எங்களை தலைகுனிய வைத்துள்ளது என்றும் வல்வை நகரசபை தலைவர் தனது மறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில்
தமிழ்மக்களுடைய ஒட்டுமொத்த விருப்பமும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜெனீவாஅமர்வுகளில் பங்குபற்ற
வேண்டும் என்பதுதான்.
அவ் அமர்வுகளில் பங்குபற்றுவது இல்லையென்று ஒருசிலர்கூடி தாமாக மேற்கொண்ட முடிவு ஒருபோதும் ஒட்டுமொத்த தமிழ்மக்களுடைய முடிவாக அமையாது.அதனால் தமிழ்தேசியகூட்டமைப்பு எடுத்த முடிவு இம்முடிவு பிழையானது என்று குறிப்பிட்ட வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் மேலும் தனது அறிக்கையில் கூறிஇருப்பதாவது
மேற்படி விடயம் தெரியவந்ததும் வல்வெட்டித்துறை மக்கள் தமிழ்தேசியகூட்டமைப்பில் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.
அவர்கள் மத்தியில் எப்படி நாம் நடமாடுவது.இனி ஒரு தேர்தல் வருமானால் எவ்வாறு அவர்கள் முன்நிற்பது.
போகவில்லை என்று சொல்லிக்கொண்டு அதற்கான காரணங்களையும் வெளியிட்டுள்ளனர்.வெளியிட்டுள்ள
காரணங்கள் ஒன்றுமே ஏற்றுக்கொள்ளகூடியதாக இல்லை.சுமுகமாக மக்கள் இங்கு வாழ்கிறார்களா?
உயர்பாதுகாப்புவலயம் இல்லை என்று அரசாங்கும் கூறிக்கொண்டு இருக்கின்றது.ஆனால் இன்றுவரை வல்வெட்டித்துறை சந்தியில் 30க்கும் மேற்பட்ட வீடுகளை பிடித்துவைத்துக்கொண்டு அது உயர்பாதுகாப்புவலயம் இதற்குள் மீள்குடியேற்ற அனுமதி இல்லை என்று ராணுவம் கூறுகின்றது.
இவ்வாறன பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு ஒருவரும் தயாராக இல்லை.ஆனால் நாட்டில் சுமுகமானநிலை அல்லது அமைதியான நிலை நிலவுவதாக கூறிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்ட வல்வை நகரசபைதலைவர் ‘ஜெனீவா அமர்வுகளில் பங்குபற்றுவது இல்லை என்ற தமது முடிவுக்கு தமிழ்தேசியகூட்டமைப்பு விடுத்திருக்கும் காரணங்களில் ஒன்றைக்கூட தாமும் தமிழ்சமூகமும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை’ என்றும் தெரிவித்தார்.