பிரித்தானிய பல்கலைக்கழக மாணாவர்கள் மற்றும் இளையோர்களின் எழுச்சிமிகு மாவீரர் நாள்.

52

பிரித்தானிய தமிழ் மாணவர்களினால் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மாவீரர் நாள் தொடக்க நிகழ்வு

பிரித்தானிய தமிழ் மாணவர்கள் மத்திய இலண்டன் பகுதியில் அமைந்துள்ள சவுத் பேங் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் 2011 நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்கள். லண்டன் சவுத் பேங் பல்கலைக்கழகம் உட்பட பிரித்தானியாவின் பிரசித்தி பெற்ற எட்டு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியங்களும் சேர்ந்து சிறப்பித்த இவ் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் பிரித்தானியாவின் லிபரல் டெமகரட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Simon Hughes அவர்கள் கலந்து பிரித்தானிய தேசிய கொடியை ஏற்றி வைத்தார் அத்தோடு ப்ருநெல் பல்கலைகழக மாணவரும் இளையோர் அமைப்பின் உறுப்பினருமான செல்வன் ராகேஷ் நம்பியார் தமிழீழ தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கொடி வணக்க பாடல் நிறைவு பெற அதனைத் தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றல் அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலர்வணக்க நிகழ்வும் இடம்பெற்றது. கைகளிலே விளக்குகளை ஏந்திய படி எழுந்து நின்று எமது மாவீர செல்வங்களுக்கு மரியாதையை செய்யப்பட்டதோடு மட்டும் நின்று விடாமல் “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய” மாவீரர் பாடல் இசைக்க மாணவர்களின் கண்ணில் சிந்திய அந்த துளிகளுடன் அஞ்சலி செய்யப்பட்டது.

நிகழ்வினை ஆரம்பிக்க லிபரல் டெமகரட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Simon Hughes அவர்களின் உரை இடம்பெற்றது, அதனைத் தொடர்ந்து Brunel University , City University , Imperial College , Kings College London , Queen Mary University of London , university College London , South Bank university, பல்கலைக்கழக மாணவர்களின் நிகழ்சிகள், பாடல்கள், உரைகள் என பல இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பின் உரையுடன் நிகழ்வு இறுதி கட்டத்தை அடைந்தது. இறுதியாக உறுதிமொழியுடன் நிகழ்வு இனிதே நிறைவேறியது.

முந்தைய செய்திஅங்கீகாரம் தேடி அலையாத அதிமானுடன் – ச.ச.முத்து
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் மாவீரர் தின அறிக்கை..