தமிழ் இளையோர் அமைப்பினர் தமிழ் மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யும் ‘இலக்கு – இலக்கிணை அடைதல்’ நிகழ்ச்சி

43
 
பிரித்தானியாவில் மிக பிரபல்யமான கேம்பிரிஜ் 
பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் இளையோர் 
அமைப்பினர் தமிழ் மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யும்
‘இலக்கு – இலக்கிணை அடைதல்’
திறமையும் ஆற்றலும் மிக்க பல தமிழ் மாணவர்கள் 
கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கு 
தயக்கம் காட்டி வருகின்றார்கள். விண்ணப்ப நடைமுறைகளை 
கையாளும் முறையில் இருக்கும் குழப்பமும் இதற்கு
ஒரு காரணமாக உள்ளது. தமிழ் இளையோர் அமைப்பு இந்த
குழப்பத்தைத் தீர்த்து உங்களின் தயக்கத்தை போக்குவதற்காக
இவ் ஒழுங்கிணை மேற்கொண்டுள்ளது.
விண்ணப்ப நடைமுறை, நேர்முக செயல்முறை மற்றும் ஒரு கேம்பிரிஜ்
மாணவனின் வாழ்க்கைமுறை என்பன பற்றி உங்களுடன் உரையாடுவதற்கு
கேம்பிரிஜ் பல்கலைக்கழக பிரதிநிதிகள் தயாராகவுள்ளனர்.
தற்போது GCSE மற்றும் AS Level படிக்கும் மாணவர்கள் இதற்கு பதிவு
செய்யலாம். குறைந்தளவு இடங்கள் உள்ளதால் முதலில் பதிவு 
செய்பவர்களுக்கே முதலிடம் வழங்கப்படும்
 
தொடர்புகளுக்கு:
—————————–
Media Team
Tamil Youth Organisation – United Kingdom
 
முந்தைய செய்திவிரைவாக செயல்படுங்கள்: இனப்படுகொலை நடந்த மண்ணில் சர்வதேச சமூக ஆர்வலர்கள் பங்குபெரும் சர்வதேச பருவநிலை மாற்றம் மற்றும் சமூக விடய மாநாடு
அடுத்த செய்திதமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்