19-11-2011 முதல் இனம் காக்க உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை போற்றும் வகையில் தமிழர் எழுச்சி வார நிகழ்வை ஒரு வாரத்திருக்கு “நாம் தமிழர் கட்சி” ஏற்பாடு செய்து இருந்தது, இதன் முதற்கட்டமாக 19-11-2011 அன்று வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த பொது கூட்ட அனுமதியை திடீரென ரத்து செய்தது தமிழக காவல்துறை.. அது மட்டுமல்லாமல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை நாம் தமிழர் நடத்தும் எந்த கூட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை, “தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி பிரச்சாரம் செய்வது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும்” என காவல்துறை காரணம் கூறியும் பல்வேறு ஏற்க இயலாத காரணங்களை கூறியும் நாம் தமிழர் எழுச்சி வார நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.. இருப்பினும் உள்ளரங்கங்களின் அந்நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது..
அதன் ஒரு பகுதியாக 25-11-2011 அன்று சென்னை அம்பத்தூரில் உள்ள ‘ஆஸ்ஸி’ பள்ளி மைதானத்தில் நடந்த நாம் தமிழர் குடும்ப விழாவில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நிகழ்த்திய உரையின் ஒலிப்பதிவு ..