நேற்று (17) ராயபுரம் பகுதியில் ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலை ஆவண காட்சி திரையிடப்பட்டது .

27

நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம், ராயபுரம் பகுதியில் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவு தந்த அணைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ” நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்” நடைபெற்றது. மேலும் சேனல் 4 தொலைக்காட்சியின் “இலங்கையின் கொலைக்களம்” திரையிடப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ்முழக்கம். சாகுல் அமீது, அன்புதென்னரசன், அறிவுச்செல்வன், செ. எட்வின் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சி ஏற்ப்பாடு பா.ஆனந்துராசு, அருன்க்குமார்.

இந் நிகழ்வில் ஏராளமான ராயபுர பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திஈரோடு நாம் தமிழர் சார்பாக நேற்று சத்தியமங்கலம் பகுதியில் “இலங்கையின் கொலைக்களம்” திரையிடப்பட்டது.
அடுத்த செய்திகாமாராசர் பிறந்த நாளன்று(15) கடலூர் மேற்கு மாவட்டத்தில் காமாராசர் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.