நேற்று (10-07-11) ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

14ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக இன்று (சூலை 10)  காலை 10 மணியளவில் தமிழர் செயராசு அவர்கள் அலுவகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் பெரும்பாலான ஈரோடு மாவட்ட நாம் தமிழர் உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்.

தலைமை : தமிழர்.செயராசு
முன்னிலை:தமிழர்.திருநாவுக்கரசு,தமிழர்.லோகு
ஒருங்கிணைப்பு :தமிழர்.சோதிவேல்

மேலும் இதில் கிழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது , அதன் விவரம் பின்வருமாறு

1. ஈரோடு மாவட்டத்திற்கு கட்சி அலுவலகம் ஏற்படுத்துவது

2. சேனல் 4 வெளியிட்ட ஆவண படத்தை ஈரோடு மாவட்டம் முழுமைக்கும்  மக்களிடையே கொண்டு செல்வது     மாத இறுதிக்குள் குறைந்தபட்சம் 100 இடங்களில் ஒளிபரப்புவது.

3. மாவட்டம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை மூலமாக சிறந்த கட்டமைப்பை உருவாக்குவது

4. வருகின்ற ஆடி பெருக்கு திருவிழாவை கொண்டடுவதற்கு  உண்டான ஏற்பாடுகளை மேற்கொள்வது