ஈழத் தமிழருக்கு ஆதரவு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் திருப்பூர் நாம் தமிழர் பங்கேற்ப்பு

19

ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த சிறிலங்க அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளது, தமிழர்களுக்கு எதிராக மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்று ஐ.நா.பொதுச் செயலர் அமைத்த நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை இந்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் .இன்று வெள்ளிகிழமை அன்று (8.07.2011) திருப்பூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருப்பூர் நகராட்சி அலுவலகம் முன்பாக நடை பெற்ற மாபெரும் ஆர்பாட்டத்தில், திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட அமைப்பாளர்தமிழ் .திரு : செல்வம்,  தலைமையில் தமிழ் திரு : பாலா, தமிழ் திரு : பரமசிவம்,  மேலும் பகுதி அமைப்பாளர்கள் உட்பட திரளான 50  மேற்பட்ட நாம் தமிழர் உறவுகள் ஊர்வலமாக சென்று ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்திய கம்னிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட செயலாளர் தமிழ்த்திரு . ரவி அவர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார் இதில் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றிய மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயற் குழு உறுப்பினர் :தமிழ் திரு :சுப்புராயன் அவர்கள் ,ஈழ வரலாறு குறித்தும் ..தமிழ் இன படுகொலைகள் குறித்தும் இதற்கு உறுதுணையான இந்திய அரசை கண்டித்தும் சிறப்புரையாற்றினார்.

முடிவில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு  தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்

முந்தைய செய்திகோலார் தங்கவயல் பேரணி மற்றும் பொதுகூட்டம் – 10-07-2011
அடுத்த செய்திநேற்று (10-07-11) ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது