தஞ்சை மாவட்டம் ,கும்பகோணம் அருகே உள்ள எஸ்.புதூரில் கடைவீதியில் வரும் 31-07-2011 அன்று மாலை 5 மணி அளவில் திருவிடைமருதூர் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக ஈழத்தமிழர்களை கொன்றொழித்த சிங்கள பேரினவாத அதிபர் ராசபட்சேவினை போர்க் குற்றவாளி என அறிவிக்கக் கோரி, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரி தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்மானத்தினை மத்திய அரசு நிறைவேற்றக் கோரி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர். தீன.செல்வம் தலைமை வகிக்கிறார். தஞ்சை மாவட்ட அமைப்பாளர்கள் வழக்கறிஞர் வினோபா என்ற வீரக்குமரன், சதா. முத்துகிருட்டிணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இக்கூட்டத்தில் அன்னை கல்விக் குழும நிர்வாகியும், நாம் தமிழர் கட்சியின் உயர் மட்டக்குழு உறுப்பினருமான அன்னை.ஹீமாயூன், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.அ.நல்லதுரை, மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர்கள் வழக்கறிஞர்.மணி செந்தில், பேராசிரியர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்துக் கொண்டு எழுச்சியுரை ஆற்ற இருக்கின்றனர். கூட்டத்தில் இலங்கையின் போர்க்களம் -சேனல் 4 வெளியிட்ட இலங்கையின் போர்க்குற்ற காட்சிகளின் தமிழ் வடிவம் திரையிடப் பட இருக்கின்றது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சியின் திருவிடைமருதூர் ஒன்றிய நாம் தமிழர் கட்சியினர் செய்து வருகின்றனர்.
முகப்பு கட்சி செய்திகள்