அய் நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை செய்த நாடாகவும் , இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக 27.6.2011 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மாணங்கள்.
1. ஐ. நா சபை அறிக்கையின்படி இலங்கை ஒரு இனப்படுகொலை செய்த நாடு எனவும், இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கக் கோரியும், தமிழர்களுக்கு சம உரிமையுடன் நிம்மதியாக வாழ, தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் செயலலிதா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம்.இந்த ஆட்சி அமைய வாக்களித்த தாய்தமிழ் உறவுகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
2.திருப்பூர் சாயத்தொழில் கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை உடனடியாக எடுக்குமாறு கேட்டுகொள்கிறோம்
3.இலங்கையில் தயாரான பொருட்களை தமிழ் நாட்டில் விற்க தமிழக அரசுதடை விதிக்க வேண்டுகிறோம். இலங்கையில் பொருட்களை தயாரித்து தமிழ்நாட்டில் விற்பனை செய்யும் `தம்ரோ’ (Damro Furniture) போன்ற நிறுவனங்களை தமிழர்கள் புறக்கணிக்கும்மாறு கேட்டுகொள்கிறோம். அதேபோல்இலங்கையின் பொருளாதார உயர்வுக்கு உதவும் வகையில் இனவாத சிங்கள பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள தன்மானமுள்ள பனியன் நிறுவன அதிபர்கள் உடனடியாக அவர்களை பணி நீக்கம் செய்யவேண்டுகிறோம் .
4. சென்ற வருடம் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை 145 அமெரிக்க டாலராக இருந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.50.60 ஆகவும், டீஸல் ஒரு லிட்டரின் விலை 35.86 ஆகவும் இருந்தது. தற்போது பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை 91 அமெரிக்க டாலராக இருக்கிறபோது ,ஏன் பெட்ரோல் விலை ரூ 69 ஆகவும் டீஸல் விலை 43.80 ஆகவும் உள்ளது? தற்போதும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எப்படி கோடிக்கணக்கில் இழப்பு ஏற்ப்படுகிறது? பெட்ரோல் விலை பற்றிய உண்மையான வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிடவேண்டும்
5.வெளிநாட்டில் இருக்கும் நமது கருப்பு பணம் அனைத்தையும் கைப்பற்றி அதனை நாட்டுடைமை ஆக்கி மக்கள் நலப்பணிகளுக்கு உபயோகப் படுத்தவேண்டும் வேண்டும். அதற்க்கு தடையாய் நிற்கும் காங்கிரசுக் கட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டும். தன்னுடைய அதிகாரத்தை வைத்துக் கொண்டு மிகப் பெரிய அளவில் ஊழல் செய்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அவர்களை மத்திய அரசில் இருந்து பதவி நீக்கம் வேண்டும்.