தஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக வருகிற ஜீலை 4 ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம்

51
தஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியின்சார்பாக தமிழரின் நதிநீர் உரிமைகளை மீட்டு விவசாயிகளின் நலன் காத்திடக் கோரி வருகிற 04-07-2011 திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் கலந்துக் கொண்டு உரிமை முழக்கம் செய்கிறார். இக்கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதா முத்துகிருட்டிணன் தலைமை தாங்குகிறார். தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் .இரா.வினோபா,சோ.கெளதமன் ,தஞ்சை மாவட்ட இளைஞர் பாசறை அமைப்பாளர் க.ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்முழக்கம் சாகுல் அமீது, வழக்கறிஞர். அ.நல்லதுரை, அன்பு தென்னரசு, மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர்கள் வழக்கறிஞர்.மணி.செந்தில்,பேரா.கல்யாணசுந்தரம், வழக்கறிஞர்.ராசீவ்காந்தி என்ற அறிவுச்செல்வன் ஆகியோர் கலந்துக் கொண்டு எழுச்சியுரை ஆற்றுகின்றனர். தஞ்சை நகர அமைப்பாளர் வழக்கறிஞர் அ.கருணாநிதி நன்றி கூறுகின்றார்.
இக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் மிகப் பிரம்மாண்டமாக செய்து வருகின்றனர்.

முந்தைய செய்திவெள்ளகோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
அடுத்த செய்திநேரலை : இலங்கையின் தமிழின அழிப்பு மற்றும் போர்குற்றங்கள் – பெங்களூருவில் இன்று கருத்தரங்கம்.