போர்க்குற்ற ஆவணங்கள் திரைப்படமாக்கப்பட்டுள்ளது; அதை மிகவிரைவில் வெளியிடுவோம் – சனல் 4 அறிவிப்பு

16

இலங்கைப் போர்க்குற்ற ஆவணங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சனல் 4  ஊடகம் அவ் ஆவணத் தொகுப்பினை திரைப்படமாக்கி எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது.

ஒரு மணித்தியாலத்தை அடக்கிய இப்போர்க்குற்ற ஆவணத்தொகுப்பு திரைப்படத்தினை எதிர்வரும் 3ம் திகதி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது.

சனல்4  ஊடகம் இத் திரைப்படத்தினை எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

இதுவரையில் வெளியிடப்படாத போர்க்குற்ற ஆவணங்களும் இத்திரைப்படத்தில் அடங்குவதாகவும், போரினால் பாதிப்புற்றோரின் வாக்குமூலங்கள், நேரடிச்சாட்சியங்கள் ஆகியனவும் இத்திரைப்படத்தில் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றமைக்கான ஆதாரமாக அமைந்த சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் அனைத்தும் உண்மையானவை என்று நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் நேற்றைய கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இந்த வீடியோ ஆதாரத்தை போலியானது என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டு வருகின்ற போதிலும், அவை உண்மையானவை என்றும் இலங்கை அரசு பொய் கூறுகின்றது என்பதும் ஐ.நா முதல் யாவரும் அறிந்ததே.

மேலதிக விபரத்திற்கு

நன்றி

தமிழ்வின்