கடந்த (12 .06 .2011) ஞாயிற்றுகிழமை அன்று காலை 10.00 மணி அளவில் காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கேயம் பகுதி ஒருங்கிணைப்பாளர் யோகராசன் அவர்கள் தலைமை தாங்கினார், கோவிந்தராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் சண்முகம், செந்தில், ரமேசு, நல்லசிவம் ஆகியோர் முன்னிலை தாங்கினர். இக்கூட்டத்தின் தொடக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் ரமேசு நன்றியுரை ஆற்றினார்.