தனி ஈழம் ஒன்றே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்

17

சென்னை லயோலா கல்லூரி தகவல் தொடர்பு மாணவர்களால்  2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அவ் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

* திமுக அணியில் மிகப்பெரிய அங்கமாகிய காங்கிரஸைப் பொருத்த வரையில், ஈழத் தமிழர் பிரச்சனையில் அக்கட்சி போட்டுவரும் இரட்டை வேடம் அதன் படுதோல்விக்கு மிக முக்கிய காரணமாக மிகப் பெரும்பாலோரால் (61.5) முன்வைக்கப்படுகிறது. உள்கட்சிப் பிரச்சனை என 20.3 சதவீத பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

*  கச்சத்தீவை மீட்க வலியுறுத்தும் அரசின் தீர்மானத்துக்கு 62.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

* 81 சதவீதம் பேர் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தை வரவேற்றுள்ளனர்.

* நாடாளுமன்றத்தில் ராஜபக்சே போர் குற்றவாளி என தீர்மானம் கொண்டுவர 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

* தனி ஈழம் ஒன்றே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.