மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையில் நடைபெற்ற தமிழர் படுகொலை காணொளி

145

சரணடைந்த தமிழ் மக்களை இலங்கை இராணுவத்தினர் கோரமாக படுகொலைசெய்யும் காட்சிகள் அடங்கிய காணொளி இன்று (30) ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் காண்பிக்கப்படவுள்ளதாகசெய்திகள் தெரிவிகின்றன.

நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி கிறிஸ்ரோஃப் ஹெயின்ஸ் இந்த காணொளியை அதன் உண்மைத்தன்மை தொடர்பில் நிபுணர்கள் ஆராய்ந்து சமர்ப்பித்த ஆதரங்களுடன் நாளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 17 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ளார்.

2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதியாக கிறிஸ்ரோஃப் ஹெயின்ஸ் நியமனம் பெற்ற பின்னர் அவர் சமர்ப்பிக்கும் முதலாவது ஆவணம் இதுவாகும்.

இந்த காணொளிகளை பிரித்தானியாவின் சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியிருந்தது.

கிறிஸ்ரோஃப் ஹெயின்ஸ் கடந்த வருடம் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டபோதும், சிறீலங்கா அரசு அதற்கான அனுமதிகளை வழங்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் மண்டல அரசியல் பயிலரங்கு மற்றும் 8 மாவட்டங்களுக்கான இளைஞர் பாசறை கட்டமைப்பு- மன்னார்குடியில் நடக்கவுள்ளது.
அடுத்த செய்திஒட்டகம் நுழைகிறது – தினமணி தலையங்கம்