மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை: 17 கம்பெனி கூடுதல் துணை ராணுவம் வருகை.

55

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 13-ந் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 13-ந் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை அன்று அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே 27 துணை ராணுவ படையினர் தமிழ் நாட்டில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கூடுதலாக மேலும் 17 கம்பெனி துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்  வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி. போலாநாத் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையின்போது, பாரபட்சமின்றி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள டி.ஜி.பி. போலா நாத் அறிவுறுத்துகிறார்.