நிபுணர் குழு அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு.

17

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று அளிவித்துள்ளது.குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென நிபுணர் குழுவினால் செய்யப்பட்டுள்ள பரிந்துரை முக்கியமான ஓர் திருப்பமாகக் கருதப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாரிய குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படுவதன் மூலம் மெய்யான நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும்.

இலங்கையில் நிலையான சமாதானத்தையும், பாதுகாப்பையும் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும். நிபுணர் குழு அறிக்கையின் ஆக்கபூர்வமான விதந்துரைகளை இலங்கை அரசாங்கம் புரிந்து கொண்டு செயற்படும் என எதிர்பார்ப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைப் பொறுப்பாளர் கெதரீன் எஸ்டோன் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திமே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை: 17 கம்பெனி கூடுதல் துணை ராணுவம் வருகை.
அடுத்த செய்திஐ.நா அறிக்கையை முறியடிப்பதில் இந்தியாவின் ஆதரவு முக்கியமானது – ராஜபக்சே