சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் 29-5-2011 அன்று சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் அவர்கள் தலைமை தாங்கினார். சந்திரசேகர் மற்றும் வணங்காமுடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை வீழ்த்த களமாடிய நாம் தமிழர் கட்சியின் செயல்வீரகளுக்கும், வேலூரில் நடைபெற்ற மே 18 பொதுக்கூட்டத்திற்கு வருகைதந்த அனைத்து நாம் தமிழர் கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் பெருமளவில் கலந்து கொண்டனர்.