அனைத்துலக விசாரணைக்கு கொரியா தனது ஆதரவுகளை வழங்கவேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

58

சிறீலங்காவில் நடைபெறும் படைத்துறை மாநாட்டை புறக்கணிக்குமாறு நாம் விடுத்த வேண்டுகோளை கொரியா புறக்கணித்துள்ளது, மாநாட்டில் கலந்துகொள்வதை விட சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்துலக விசாரணைகளுக்கு கொரியா ஆதரவுகளை வழங்குவதே முக்கியமானது என வொசிங்டனைத் தளமாகக் கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதன் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கொரிய ஊடகம் ஒன்றில் எழுதிய பத்தியில் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவில் நடைபெறும் படைத்துறை மாநாடு பொதுவானது அல்ல. அது நீதிக்குப் புறம்பான நடவடிக்கைகளை மேற்கொண்ட படையினரின் மாநாடு. ஒரு தரம்வாய்ந்த படையினரின் நடவடிக்கையாக அது அமையவில்லை. அனைத்துலக விதிகளை புறம்தள்ளிய படையினரின் மாநாடு தான் கொழும்பில் நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, யப்பான் உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளன. எனவே இந்த நாடுகளைப் பின்பற்றி கொரியாவும் மாநாட்டை புறக்கணிப்பதுடன், சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்துலக விசாரணைகளுக்கு ஆதரவுகளை வழங்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி

ஈழம் ஈ நியூஸ்

முந்தைய செய்திவருகிற சூன் 1 அன்று கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் யாழ் படிப்பகம் துவக்க விழா நடைபெறயுள்ளது.
அடுத்த செய்திPolitical truth of Mu’l’livaaykkaal