பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டைம்ஸ் சஞ்சிகையின், உலகில் மிக அதிகாரம் வாய்ந்த தலைவர்களின் பட்டியலில் இருந்து, போற்குற்றவாளி ராஜபக்சே நீக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை வரையில் முதல் நூறு பேர்களின் பட்டியில் நான்காம் இடத்தில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, காலை டைம்ஸ் சஞ்சிகையின் ஆசிரியகுழுவினரால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாக்கெடுப்பின் அடிப்படையில் அவர் இன்று காலை வரையில் நான்காம் இடத்தில் இருந்தார். எனினும் இந்த வாக்களிப்புகளில் மிகபெரிய அளவில் மோசடிகள் இடம்பெற்றதாகவும், இதற்காக ராஜபக்சேவின் ஊடக செயலகத்தில் பிரத்தியேகமாக குழு ஒன்று அமைக்கப்பட்டு, மோசடி வாக்குகள் தொடர்ந்து போடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஒரு நாட்டின் அரசாங்கம் இவ்வளவு தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டதை கண்டு டைம்ஸ் இன் ஆசிரியர் குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை டைம்ஸ் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவினரால் போற்குற்றவாளி ராஜபக்சேவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,2066367,00.html