[படங்கள் இணைப்பு] இலங்கை அரசுக்கு துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்து கோவை நாம் தமிழர் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

78

இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின்போது அப்பாவித் தமிழ் மக்கள் மீது தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி கொடூரமாக கொன்றோழி த்தது சிங்கள இனவெறி அரசு. ஐ.நா சபை விசாரணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை அரசு இனஅழிப்பு போரை அரங்கேற்றியது அம்பலமானது. அனைத்துலக நாடுகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவை போற்குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் சர்வதேச போர் குற்ற விசாரணையில் இருந்து இலங்கையை காப்பாற்ற துணை போகும் இந்திய அரசை கண்டித்து கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக 29-4-2011 அன்று நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் 70 க்கும் மேற்பட்ட தோழர்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டனர் ,இதில் தோழர், முருகேசன் ,பெரியார் திராவிடர் கழகப் பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் ,நாம் தமிழர் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர் .

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பாவேந்த பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.
அடுத்த செய்திநிபுணர்குழுவின் அறிக்கையில் சர்வதேச விசாரணைக்கு போதுமான ஆதாரங்கள் உண்டு! இன்னும் தாமதிப்பது ஏன்? – கோர்டன் வைஸ்