ஐ.நா வின் அறிக்கைக்கு எதிராக கையெழுத்திடுமாறு தமிழர்களை மிரட்டும் சிங்கள காவல்துறையினர்.

14

ராஜபக்சே அரசு தயாரித்துள்ள ஐ.நாவுக்கு எதிரான மனுவில் கையெழுத்திட வேண்டும் என்று கொழும்பு வாழ் தமிழர்களை இலங்கை உளவுப் பிரிவு போலீஸார் மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தமிழ்நெட் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி…
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக 10 லட்சம் கையெழுத்துக்களைப் பெற்று ஐ.நா.வுக்கு அனுப்ப ராஜபக்சே அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கையெழுத்து வேட்டையை அது தொடங்கியுள்ளது.

இந்த மனுவில் கையெழுத்திட வேண்டும் என்று கொழும்பில் வசிக்கும் தமிழர்களை இலங்கை காவல்துறையின் உளவுப் பிரிவு மிரட்டி வருகிறது. கையெழுத்துப் போடாதவர்களை உடல் ரீதியாகவும், மிரட்டல் மூலமும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது போலீஸ்.
2 நாட்களுக்கு முன்பு கோட்டைப் பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரை அழைத்த போலீஸ், அவரை மனுவில் கையெழுத்திடுமாறு மிரட்டியது. அவர் மறுக்கவே, போலீஸார் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வெளியிட்டுள்ளார். அதில் இலங்கை ராணுவம் செய்த மிகப் பெரிய மனித உரிமை மீறல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திஇறுதி கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் மீது தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி கொன்றனர் – ஐ.நா அறிக்கை
அடுத்த செய்திபோர்க்குற்றங்களை மேற்கொண்டவர்களின் விபரங்கள் அறியப்படவேண்டும்: மனித உரிமைகள் கண்காணிபகம்