[படங்கள் இணைப்பு] வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் செயல்வீரகள் கூட்டம்.

21

நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது. இதனையடுத்து அக்கட்சியை வீழ்த்த நாம் தமிழர் கட்சியினர் மக்களிடையே கருத்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். வருகின்ற ஏப்ரல் 8 – ந் தேதி பரப்புரைக்கு வரவிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் வருகை குறித்தும் தேர்தல் பரப்புரை குறித்தும் ஆலோசனை செய்ய வேலூர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் 30-3-2011 அன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வழக்கறிஞர் லெனின் பாலு,கி.டி,சரவணன்,உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.