[படங்கள் இணைப்பு] கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு ராஜபக்சே சகோதர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கூறி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

41

ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சிங்கள இனவெறியன் இராசபக்சே போர்குற்றம் நிகழ்த்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ராஜபக்சே சகோதர்களை தண்டிக்க கோரியும், ஐ.நா வின் இந்த அறிக்கை மீதான சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேலும் இந்திய அரசு இலங்கையை போர்குற்ற விசாரணையில் இருந்து  காப்பாற்றும் முயற்ச்சியில் ஈடுபடக்கூடாது என்றும் இன்று(29.04.11)  கரூர் நாம் தமிழர் கட்சினர் காலை 10 மணி அளவில் கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு கரூர் ஒருங்கிணைப்பாளர் முரளி தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் அதை அடுத்து நாம் தமிழர் கட்சியினர் ஐம்பதுக்கு மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

முந்தைய செய்திகொழும்பில் நாளை பேரணி-இந்தியா தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்-சீமான்.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற இராசபட்சேவை தூக்கில் ஏற்றி, கொடும்பாவி கொளுத்தும் கண்டன ஆர்பார்ட்டம்