[படங்கள் இணைப்பு]நேற்று 04.04.11 கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள்

51

வருகிற சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சியை அத்தனை தொகுதிகளிலும் தோற்க வைக்க நாம் களம் இறங்கியுள்ளோம். காங்கிரஸ் கட்சியினரும் இதே பணியில் தான் உள்ளனர், நெற்றி 04.04.11  கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரத்தில், சிங்கநல்லூர், ஆனைமலை, ஆவிநாசியில் நடைப்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் அவர்கள் பேசியதாவது

தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகள் நிற்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி யுத்த களத்தில் நிற்கிறது. காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற வரலாற்று கடமையுடன் தமிழக மக்கள் முன் நம்பிக்கையுடன் நிற்கிறோம் என்றார் மேலும் அவர் பேசுகையில்
உலகத்தில் உள்ள சிறிய நாடுகளில் கூட தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் 8 மணி நேரம், 10 மணி நேரம் என்றும், சில கிராமங்களில் 3, 4 நாட்களுக்கு கூட மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின்சாரமே இல்லையாம், இதில் இலவச மின்சாரத் திட்டமா? நல்ல வேடிக்கை. நாங்கள் இலவச மின்சாரம் கேட்கவில்லை, தடையில்லா மின்சாரத்தைத்தான் கேட்கிறோம்.

இலங்கையிலே ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்துவிட்டு, தற்போது தமிழர்களிடம் வாக்கு கேட்டுவர காங்கிரஸ் கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது?.

யாராவது உங்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுக்க வந்தால், அவர்களிடம் உங்களுக்கு இந்த பணம் எல்லாம் எங்கிருந்து வருகிறது? என்று கேளுங்கள். அவர்கள் என்ன தான் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். மக்களின் உழைப்பை சுரண்டி சேர்த்த பணம். அதை வாங்கிக் கொண்டு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.

தமிழகத்தில் காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதன் தோல்விக்கான காரணத்தை ஆராயும்போது, ஈழத்தமிழர்களை அளித்த துரோகத்திர்க்க்காகவும் தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய அணைத்து உரிமைகளும் மீட்டு தர போராடாமல் கள்ள மௌனம்காத்ததால்  இந்த தோல்வி கிடைத்தது என்பது தெரியவேண்டும் என்றார்.