[படங்கள் இணைப்பு]ஈரோட்டில் நடைபெற்ற ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வீரவணக்க பொதுக்கூட்டம் மற்றும் பேரணி.

19

தமிழின உணர்வாளர்களின் கூட்டமைப்பினால் 21.04.11 அன்று ஈரோட்டில் தமிழீழ மக்களின் வாழ்வுரிமைக்காக தன் இன்னுயிரை தற்கொடையாக்கிய நெல்லை சங்கரன்கோவில் பொறியாளர் கிரிட்டினமூர்த்திக்கு ஈரோடு தலைமை அஞ்சல் நிலையம் எதிரில் வீரவணக்கப்பொதுக்கூட்டம்  மாலை 4.30மணி அளவில் நடைபெற்றது.பிறகு இராசபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரியும் த்மிழினப்படுகொலைக்குத்துணைபோன  இந்திய அரசுக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமும் கண்டனப்பொதுக்கூட்டமும்  நடந்தது.

அதன்பின் பொறியாளர் கிரிட்டினமூர்த்தியின் ஈகைக்கு அஞ்சல் நிலையத்திலிருந்து ஈரோடு பேருந்து நிலையம் வரை முக்கிய வீதிகளின் வழியாக அமைதிப்பேரணி நடைபெற்றது.இதில் நாம் தமிழர் கட்சி,பெரியார் திராவிடர் கழகம்,தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்,தமிழ்த்தேசப்பொதுவுடைமைக்கட்சி மற்றும் மனித நேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புக்கள் கலந்து கொண்டன. நாம் தமிழர் கட்சியைச்சார்ந்த பெரும்பாலானோர் கலந்து கொன்டனர்.

முந்தைய செய்திராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] சிங்கள கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு செந்தமிழன் சீமான் நேரில் ஆறுதல்.