தொடரும் இந்தியாவின் துரோகம் ! நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக பாதுகாப்புச் சபையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவு.

65

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கெதிராக பாதுகாப்புச் சபையின் நான்கு நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அவற்றில் வீட்டோ அதிகாரமுள்ள இரண்டு நாடுகளும், தற்காலிக உறுப்புரிமை கொண்ட இரண்டு நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. ரஷ்யா மற்றும் சீனா ஆகியனவே வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளாகும்.

அத்துடன் இந்தியா மற்றும் போர்த்துக்கல் ஆகிய தற்காலிக உறுப்புரிமை கொண்ட இரண்டு நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன.

பாதுகாப்புச் சபையின் மொத்த உறுப்பினர் நாடுகளான பதினைந்து நாடுகளில் ஐந்து நாடுகள் வீட்டோ அதிகாரம் கொண்டவையாகும். மேலும் பத்து நாடுகள் இரண்டு வருட உறுப்புரிமை அடிப்படையில் தற்காலிகமாக சுழற்சி முறையில் இணைத்துக் கொள்ளப்படும் நாடுகளாகும்.

பாதுகாப்புச் சபையில் ஒரு நாட்டுக்கு எதிரான பிரேரணையொன்று நிறைவேற சாதாரண பெரும்பான்மை இருந்தாலே போதுமானது. ஆயினும் வீட்டோ அதிகாரமுள்ள ஒரு நாடாயினும் அதனை எதிர்க்கும் பட்சத்தில் பிரஸ்தாப பிரேரணை செல்லுபடியற்றதாகி விடும்.

அந்த வகையில் ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றின் ஆதரவை நம்பியே அரசாங்கம் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக நம்பப்படுகின்றது.

ஈழதமிழர்கள் மீதான இலங்கையின் இனவெறி போருக்கு இரு கரமும் கொடுத்து உதவிய இந்திய அரசு தனது தமிழின எதிர்ப்பு நிலைபாட்டில் ஐ.நா நிபுணர் குழு அறிக்கைக்கு பிறகும் உறுதியாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திடாஸ்மாக்கில் தமிழ்நாடு பாஸ்மார்க்!
அடுத்த செய்திஐ.நா நினைத்திருந்தால் இறுதிகட்ட போரின்போது பொதுமக்கள் மரணத்தை தடுத்திருக்கலாம் – ஐ.நா முன்னாள் பேச்சாளர்.