தகவல்கள் கிடைக்கவில்லை! ஏன் என்று தெரியவில்லை! வன்முறை தவறு! டெலிபோனில் பேசி இருக்கிறேன்! துரதிஷ்டம்! – படுகொலை செய்யப்பட்ட மீனவர்கள் பற்றிய கேள்விக்கு நிருபமா ராவ் மெத்தனமான பதில்.

89

போற்குற்றவாளி ராஜபக்சேவுடன் நிருபமா ராவ்

ஏப்ரல் 2 ஆம் தேதி, இந்திய – இலங்கை அணிகளிக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து சினம் கொண்ட சிங்கள கடற்படை தமிழக மீனவர்கள் 4 பேரை நடுகடலில் கொடூரமாக கொன்றுபோட்டது. தமிழர்களின் காயம்பட்ட 4  உடல்களும் கரையொதுங்கி இருக்கிறது. வழக்கம் போல தமிழக அரசு 5 லட்சம் நிவாரணம் வழங்கி அமைதிகாக்கிறது. இந்த கொடூர நிகழ்வு பற்றி செய்தியாளர்கள் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு மிகவும் மெத்தனமாக பதிலளித்துள்ளார்.

“4 தமிழக மீனவர்கள் உயிரிழந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு மீனவரின் உடல், யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கி உள்ளது. இதனால் யாழ்ப்பாணத்தில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுக்காக காத்திருக்கிறோம். இப்போது போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த மரணம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. மேற்கொண்டு தகவல் கிடைக்குமா என்பதை அறிய, தமிழக அரசின் தலைமை செயலாளருடன் டெலிபோனில் பேசினேன். தமிழக அரசிடம் இருந்து விரிவான தகவலுக்காக காத்திருக்கிறோம்.

கடந்த சில மாதங்களாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். தமிழக மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறோம். ஒருவேளை, தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதாக தெரிய வந்தால், அதுபற்றி இந்தியாவிடம் தெரிவிக்க வேண்டும். அவர்களை பிடித்து, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும், அவர்களுக்கு எதிராக வன்முறையை வழிமுறையாக பயன்படுத்தக்கூடாது.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண, இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவின் அடுத்த கூட்டம் நடக்கும் தேதி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.”

இவ்வாறு நிருபமாராவ் மெத்தனமாக பதிலளித்துள்ளார்.

முந்தைய செய்திபோர்குற்ற அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்துவதா! – இலங்கைக்கு ஐ.நா எச்சரிக்கை
அடுத்த செய்தி[படங்கள், காணொளி இணைப்பு] பூந்தமல்லி ஏதிலிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேர் தங்களை விடுவிக்ககோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.