சுவிஸ் வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் என விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ஜே, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சுவிஸ் வங்கியில் மற்ற நாடுகளின் பணத்தை விட சுவிஸ் வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் உள்ளது. மேலும் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வரும் கறுப்பு பணம் விவகாரம் குறித்த தகவலிகளில் இந்திய அரசு மட்டும்தான் மெத்தனப்போக்கை பின்பற்றிவருதாக அசாஞ்ஜே கூறியுள்ளார்.
இதேபோலே சுவிஸ் வங்கியில் கறுப்பு பணத்தை வைத்திருக்கும் ஜெர்மனி மிக வேகமாக சுவிஸ் வங்கியிலிருந்து கறுப்புபணத்தை மீட்டு வருவதாகவும். ஆனால் இந்திய அரசு மிக மோசமாக இந்த விசயத்தில் செயல்பட்டுவருவதாக அசாஞ்ஜே தெரிவித்தார்.