கனடியத் தமிழர் பே ரவை ஊடக அறிக்கை: தமிழின உணர்வாளர்கள் தீக்குளிப்பதை தவிர்த்து போராட வேண்டும்!

16

தமிழின உணர்வாளர்கள் தீக்குளிப்பதை தவிர்த்து போராட வேண்டும்!

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை வெளி வந்துள்ள வேளையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் உள்ள சீகம்பட்டி கிராமத்தில் இளம் பொறியியலாளரான கிருஷ்ண மூர்த்தி என்ற இளைஞர் தனக்குத் தானே தீ மூட்டி தீக்குளித்துள்ளார். அவரது உணர்வு பூர்வமான இத்தியாக நிகழ்வானது எம்மை அதிர்ச்சிக்கும், ஆறாத் துயருக்கும் ஆளாக்கி உள்ளது. விலை மதிப்பற்ற உயிரை அவர் தியாகம் செய்துள்ளமை எம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அவரது இன உணர்வினை நாம் மெச்சும்

அதேவேளையில் இது போன்று தமிழ் நாட்டில் இன்னுமொரு உயிர்ப்பலி ஏற்படக் கூடாது. இதுவே இறுதி உயிர்ப்பலியாக இருக்கட்டும்.

மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டும், இந்தியா ஸ்ரீலங்காவுக்கு உதவக் கூடாது இவற்றைக்கண்டிப்பதற்காகவே நான் தீக்குளிக்கிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு அவர் தீக்குளித் துள்ளார்.

இத்தகைய இன உணர்வுள்ள இளந்தலைமுறையினர், தமிழ் மக்களின் இதயத்தை ஈட்டிபோல் தைக்கும் இன்னுயிர் தியாகத்தைக் கைவிட்டு தமிழினத்தின் நலனுக்காகப் பாடுபடும் அரசியல் கட்சிகளில் இணைந்து அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது பணிவான வேண்டுகோளாகும் என கனடாவிலுள்ள தமிழர் பேரவையின் பேச்சாளரான டேவிட் பூபாலபிள்ளை வேண்டுகோள் விடுத் துள்ளார்.

முந்தைய செய்திதமிழருக்காய் இன்னுயிர் தந்த கிருட்டிணமூர்த்திக்கு நாம் தமிழரின் வீரவணக்கம்-சீமான்
அடுத்த செய்திபோர்குற்ற அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்துவதா! – இலங்கைக்கு ஐ.நா எச்சரிக்கை