ஐ.நா நிபுணர் குழு அறிக்கை ஒரு புனைகதை – இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

22

ஐக்கிய நாடுகள் சபைப் பொதுச்செயலாளரின் நிபுணர் குழுவின் அறிக்கை ஒரு புனைகதை என்று கூறியுள்ளது இலங்கை அமைச்சர்  ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார் .

ஐ.நா. பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கை அரசு அடியோடு நிராகரித்தாலும் அதனால் ஏற்படப் போகும் விளைவுகளை எதிர்கொள்வதற்கான இராஜதந்திரப் போரை அது ஆரம்பித்துள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது.

அதன் முதற்கட்டமாக வெளிநாட்டுத் தூதர்களை நேற்றுக் காலையில் இரண்டாவது தடவையாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்தித்து நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை விளக்கினார்.

அப்போது அவர் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையானது பக்கச்சார்பானது!  வன்மம் பாராட்டுவது!  பரபரப்பான புனைகதை நோக்கி வழிப்படுத்துவது என்று அமைச்சர் பீரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திஐக்கிய நாடுகள் நிபுணர் குழு மூன்று முட்டாள்கள் குழு: இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச
அடுத்த செய்திஈழ தமிழர்களுக்காக இன்னுயிர் துறந்த ஈகி கிருட்டினமூர்த்தியின் தியாகத்தை திசை திருப்ப காவல்துறையினர் முயற்சி