ஐ.நா அறிக்கை குறித்த ஆலோசனை – இந்திய குழு இன்று இலங்கை செல்கிறது

29

தமிழனத்தின் பெரும் அழிவுக்கு துணை புரிந்த இந்தியா, பல லட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பொழுது கூட,அங்கு பொது மக்களுக்கு எதுவுமே ஆகவில்லை பாதுகாப்பாக இருகின்றார்கள் என்று பொய் சொல்லி உலகை நம்ப வைக்க முயன்ற இந்தியா, இப்பொழுதும் இந்த போற்குற்றங்களில் இருந்து ராஜபக்சேவை காப்பாற்ற தனது ராஜ தந்திர காய் நகர்த்தல்களை தொடங்கியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் மக்களின் கவனம் தேர்தல் முடிவுகளில் திசை திரும்பி இருக்கும் இந்த தருணத்தில் சத்தமில்லாமல் இலங்கைக்கு இந்தியா குழுவை அனுப்புகிறது.

இதுநாள் வரையிலும் ராஜபக்சே செய்த கொடுமைகளை ஆதரித்து,அவனுக்கு அரணாக காத்து நின்ற இந்தியா, ராஜபக்சேவின் கொடுமையான போர்குற்றங்கள் அம்பலமாகி, சர்வேதச அளவில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் இந்த சூழ்நிலையிலும் அவனை காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்துடனே ‘நிருபமா ராவ்’ தலைமையிலான இந்தியக் குழுவை இலங்கைக்கு அனுப்புகிறது.

முந்தைய செய்திதமிழக சட்டசபை தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை
அடுத்த செய்திதமிழக தேர்தல் முடிவுகள் : அ.தி.மு.க கூட்டணி முன்னிலை. கருணாநிதி ராஜினாமா!