இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயுதங்களை விநியோகம் செய்த நாடுகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எவ்வாறான நிலைமை காணப்படுகின்றது என்பதனை அறிந்து கொண்டே ஆயுதங்களை விநியோகம் செய்த நாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்;டுள்ளார். பிரித்தானியா, அமெரிக்கா, ரஸ்யா, சீனா, இந்தியா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல்வேறு ஆயுதங்களை விநியோகம் செய்துள்ளன.
2009 மே இறுதிக் கட்ட போரின் போது படையினர் புலிகளின் நிலைகள் மீது முன்நகர்ந்த வேளையில் அதிகளவு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகஅவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் உயிரிழப்புக்கள் தொடர்பில் பல நாடுகள் அறிந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.