இனவெறியன் ராஜபக்ஷேவுடன் காங்., வேட்பாளர் ஹசன் அலி இருக்கும் சுவரொட்டி ஒட்டப்பட்ட மகிழுந்து பறிமுதல்

32

இலங்கை இனவெறி அதிபர் ராஜபக்ஷேயுடன், ராமநாதபுரம் காங்., வேட்பாளர் ஹசன் அலி இருப்பது போன்று, சுவரோட்டி ஒட்டப்பட்ட காரை, காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். நாம் தமிழர் கட்சி ராமநாதபுரஒருங்கிணைப்பாளர் டொமினிக் ரவி, இளங்கோ மற்றும் ஜெரோன்குமார் ஆகியோர், நேற்று, ராமேஸ்வரம் பகுதியில் காங்கிரஸ் கட்சின் தமிழின துரோகத்தை பற்றியும் அதன் ஊழல்கள் பற்றியும் பாம்பன் பகுதியில் பிரசாரம் செய்தனர். இவர்கள் சென்ற மகிழுந்தை , காங்., வேட்பாளர் ஹசன் அலி 2 லட்சம் தமிழர்களை கொன்ற ராஜபக்ஷேவிடம் இருந்து கேடயம் வாங்குவது போன்ற படத்துடன், “கொலைகார கை சின்னத்திற்கு வாக்களிக் காதீர்’ என்ற வாசகத்துடன் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து வேட்பாளர் ஹசன் அலி, தன்னை பற்றி நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பிரசாரம் செய்வதாக போலீசில் புகார் செய்தார். பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட இண்டிகா மகிழுந்து, பாம்பன் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.