நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் காங்கிரசுக்கு எதிராக மேற்கொண்டு வரும் பரப்புரையில் நேற்றைய தினம் 29-3-2011 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ராமேஸ்வரம்,பரமக்குடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ராமேஸ்வரம் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய செந்தமிழன் சீமான் அவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை சித்ரவதை செய்து சுட்டுக்கொல்லும் சிங்கள கடற்படையை கண்டுகொள்ளாமல் தமிழின அழிப்பிற்கு துணை போய் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை நாம் வீழ்த்த வேண்டும் என்றும் இனி ஒரு முறை இந்த மண்ணில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் வருங்கால நம் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருடைய வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும் என்றும். காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது என்பது நாம் தமிழர் கட்சியின் குறிக்கோள் மட்டுமல்ல தமிழனாக பிறந்த ஒவ்வொரு தமிழனுக்குமான கடமை என்று மக்களுக்கு உணர்த்தினார்.
இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான வழக்கறிஞர் தடா சந்திரசேகர்,தமிழர் அரப்பா , தலைமை கழக பேச்சாளர் பேராவூரணி திலீபன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம், ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பளார் டோம்னிக் ரவி,மற்றும் இயக்குனர் செல்வமணி, இயக்குனர் செல்வபாரதி உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.