[படங்கள் இணைப்பு] மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கருத்துப் பரப்புரை பொதுக்கூட்டம்.

127

தமிழின அழிப்பிற்கு துணைபோன காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்த நாம் தமிழர் கட்சி பரப்புரை மேற்கொண்டு வருகிறது. 28-3-2011 அன்று மதுரை வடக்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்காங்கிரஸ் கட்சியின் தமிழின விரோத போக்கை மக்களுக்கு விளக்கி கூறினார். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல்,காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்,ஆதர்ஷ் வீட்டு குடியிருப்பு ஊழல் என இந்த காங்கிரஸ் ஆட்சியில் அரங்கேறிய ஊழல்களையும் மக்கள் படும் சிரமங்களையும் எடுத்து கூறி காங்கிரசின் சின்னமான “கை” சின்னத்திற்கு வாக்கு போடவேண்டாம் என கேட்டு கொண்டார்.

இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சிவக்குமார், மதுரை வெற்றிக்குமரன், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கோட்டை குமார், வழக்கறிஞர் தடா.சந்திரசேகர், பேராசிரியர் அறிவரசன் அய்யா, அரப்பா தமிழன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம், தலைமை கழக பேச்சாளர்கள் புதுகோட்டை ஜெயசீலன்,பேராவூரணி திலீபன்,இயக்குனர் செல்வ பாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

முந்தைய செய்திசீறும் சீமான் – கவிஞர் காப்பிராயன்
அடுத்த செய்திVTS 01 1 002