வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேர்தல் பரப்புரை பயிற்சிக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 13.3.2011 அன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதில் சென்னையிருந்து அய்யா நடராசன், கோவையில் இருந்து அய்யா.முருக.ராசாங்கம் , பேராசிரியர் கல்யாணசுந்தரம் , வழக்கறிஞர் ஆனந்தராசா மற்றும் “என்ன செய்யலாம் இதற்காக” என்ற புத்தகத்தை படைத்த பிரபாகரன் மற்றும் காளிங்கன் ஆகியோர் பேசினார்கள்.கருத்தியல், களப்பணி, சட்டம் மற்றும் காவல்துறை விதிகள் ஆகிய தலைப்புகளில் பேசப்பட்டது. இக்கூட்டத்தில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட களப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தை திருப்பூர் மாவட்டபொறுப்பாளர் செல்வம் தலைமையில் பரமசிவம், அருட்செல்வர் , தமிழன் வடிவேல், சரண் மற்றும் குணா ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.