[புகைப்பட தொகுப்பு இணைப்பு] நேற்று 30-03-11 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள்

42

நாம் தமிழர் கட்சி தமிழின எதிரியான காங்கிரஸ் கட்சியை இந்த சட்டமன்ற பொது தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் படுதோல்வி அடைய செய்வதையே இலக்காக கொண்டு “நாம் தமிழராய் உருவெடுப்போம் காங்கிரசை கருவறுப்போம் ” என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தை யுத்த களமாக மாற்றி களமாடிவருகிறது.

நேற்று புதன்கிழமை 30-03-11 சீமான் தலைமையிலான பரப்புரை குழு சிவகங்கை, காரைக்குடி, திருமையம் ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டனர். சீமானின் சொந்த ஊரான இந்த பகுதியில் ஆயிரக்கணக்காண மக்கள் சீமானின் பேச்சை கேட்க ஆர்வமாக திரண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் துரோகத்தை தோலுரித்து காட்டிய சீமான் நேற்று தமிழக காங்கிரசாரின் தமிழர் பிரச்சனைகளின் நிலைப்பாடுகள் பற்றி கேள்வி எழுப்பினார். தமிழரின் வாழ்வாதார பிரச்சனைகளான அண்டை மாநிலங்களுடனான நீராதார பங்கீடு, மீனவர் படுகொலை போன்ற பிரச்சனைகளில் ஒன்று கூட இதுவரை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கண்களில் படவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பினார். விவசாயிகள் தற்கொலை செய்யும் போதும் மீனவர்கள் சிங்கள இனவெறி கடற்படையால் சுட்டுகொல்லப்படும் போதும் கூட வாய் திறந்து ஒரு ஆறுதல் வார்த்தை பேசியது இல்லை. இருப்பினும் இவர்களும் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் அவை விசித்திரமானவை. பல கோஷ்டிகளாக பிரிந்து கிடைக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு வீதிக்கு வந்து உண்ணாவிரதம் முதல் தீக்குளிப்பு வரையிலான பதவி சண்டை நடத்துகிறார்கள். தன் கட்சி வேட்பாளரை எதிர்த்து ஊர்வலம் போகிறார்கள். ஆனால் என்றைக்காவது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக உரிமைக்காக ஒரு போராட்டம் நடத்தியதுண்டா இவர்கள்? என கேள்வி எழுப்பினார்.

தேர்தல் அறிக்கையில் இலவசங்களை மட்டுமே முன்வைத்து தமிழர்களை மானம் இல்லாத கேவலமான சமூகமாக்கிவிட்டார்கள்! நாட்டில் எங்கும் ஊழல்… விலைவாசி விண்ணை முட்டுகிறது. மின்சாரமே இல்லாத நாட்டுக்கு கிரைண்டர், மிக்ஸி, டி.வி., லேப்டாப் தருகிறார்களாம்! இவர்கள் யாரவது ஒருவர் கல்வியை இலவசமாக தருகிறோம் என்று சொல்லுகிறார்களா … சொல்லமாட்டார்கள். குறைந்தது நிலவிவரும் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண பிரச்சனைக்காவது தீர்வு காணுவார்களா.. அதுவும் செய்யமாட்டார்கள்.

நாம் பட்ட வலிக்குப் பழிதீர்க்கும் வகையில், ‘கை’ சின்னத்தைப் பார்த்தால் காறித் துப்பித் தோற்கடியுங்கள். தமிழர் ரத்தத்தில் மூழ்கியுள்ள அந்தக் கட்சியைக் கொன்று ஒழிக்காமல், தமிழர் விடுதலையை வென்று எடுக்க முடியாது! காங்கிரசின் வீழ்ச்சியே தமிழ் தேசியத்தின் எழுட்சி” என முழங்கினார்.

இக்கூட்டங்களில் தலைமை கழக பேச்சாளர்கள் கோட்டை குமார், புதுக்கோட்டை ஜெயசீலன், பேராவூரணி திலீபன், இயக்குனர்  திரு.ஆர்.கே.செல்வமணி, செல்வபாரதி, மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றி குமரன், காரைக்குடி மாவட்ட பொறுப்பாளர் மாறன், புதுக்கோட்டை சுவாமிநாதன், மூத்த இதழியலாளர் அய்யநாதன், தமிழர் அரப்பா, உட்பட பலர் உரையாற்றினர்.

சிவகங்கையில் நடைபெற்ற பரப்புரை கூட்டம் புகைப்பட தொகுப்பு :

திருமையத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்ட புகைப்பட தொகுப்பு :

காரைக்குடியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்ட புகைப்பட தொகுப்பு :