தமிழ் இனத்தை அழித்த இலங்கைக்கு சுற்றுலா செய்வதில் – இந்தியர்கள் முதலிடம்

14

இலங்கைக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்நாட்டுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கையில் இந்தியர்கள் முதலிடம் வகிக்கின்றனர்.இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் 1,08,057 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைகக்கு சென்றுள்ளனர்.

இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 1,39,994 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களை ஒப்பிடும்போது இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 36.1 சதவீதம் உயர்ந்துள்ளது.சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 17, 524 இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கை சென்றனர். இது இந்த ஆண்டு, 23,857 ஆக அதிகரித்துள்ளது. இந்தியர்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் இலங்கைக்கு சுற்றுலா செல்பவர்கள் பிரிட்டன் மக்கள்.

கடந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கை வந்த பிரிட்டன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18, 928 ஆக இருந்தது. இந்த ஆண்டு இது 19,132 ஆக அதிகரித்துள்ளது.சென்ற ஆண்டு 6.5 லட்சமாக இருந்த வெளிநாட்டுப் பயணிகள் எண்ணிக்கை இந்த ஆண்டு 7 லட்சமாக அதிகரிக்கும் என இலங்கை அரசின் சுற்றுலாத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முந்தைய செய்திஎதிர்வரும் தமிழக தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் வாகனங்களில் கொண்டு சென்ற ரூ.20 கோடி பறிமுதல்
அடுத்த செய்தி“பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங்கையின் அனுபவம்” என்ற பாதுகாப்பு படைத்தரப்பின் மாநாட்டை புறக்கணிப்பதற்கு அமெரிக்காவும், யப்பானும் திட்டமிட்டுள்ளன.