எதிர்வரும் தமிழக தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் வாகனங்களில் கொண்டு சென்ற ரூ.20 கோடி பறிமுதல்

40

எதிர்வரும் தமிழக தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் வாகனங்களில் கொண்டு சென்ற ரூ.20 கோடி பறிமுதல்

நெருங்கிவரும் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி வாக்குக்கு காசு கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டது அப்பொழுது தமிழகம் முழுவதிலும் இருந்து ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை மேலும் தீவிரம் ஆகும் என்று தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்காக, தமிழகம் முழுவதும் காவல்துறையினரும், பறக்கும் படையினரும் வாகனங்களை வழிமறித்து சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.20 கோடி கைப்பற்றப்பட்டது.
இந்த நிலையில், இந்த சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படும்’ என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, தேர்தல் ஆணையர்கள் வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரம்மா ஆகியோர் நேற்று சென்னை வந்தனர்.
மீனம்பாக்கம் டிரைடன்ட் விடுதியில் உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல்துறை அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைப்பெற்றது.


பின்னர் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி செய்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-   அங்கீகரிக்கப்பட்ட 9 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். அதற்கு அவர்கள் திருப்தியும், மகிழ்ச்சியும் தெரிவித்தார்கள்.

தேர்தலில் வேட்பாளர்களின் செலவினத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த அவர்கள், அந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
மேலும் சில அதிகாரிகள் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர்கள் நடுநிலையுடன் செயல்படவில்லை என்றும் அரசியல் கட்சியினர் சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.இந்த புகாரை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. அதுபற்றி தீர விசாரிக்க வேண்டியுள்ளது. தேவைப்பட்டால் அதிகாரிகளை மாற்றுவோம். தேர்தலில் அதிகாரிகள் நடுநிலையுடன் இருக்க வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் மிகவும் உறுதியாக உள்ளது என்றார்.

முந்தைய செய்திதமிழக சட்டமன்ற வரலாறு!
அடுத்த செய்திதமிழ் இனத்தை அழித்த இலங்கைக்கு சுற்றுலா செய்வதில் – இந்தியர்கள் முதலிடம்