எம்.கே. நாராயணன் புலிகள் எதிர்ப்புவாதி! – விக்கிலீக்ஸ்

58

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் விடுதலைப் புலிகள் எதிர்ப்பு வாதி என விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அவருக்கு விடுதலைப் புலிகளைப் பிடிக்காது எனவும், ஒரு பக்கச் சார்பாக அவர் நடந்ததோடு, அவர் ஒரு நடு நிலை வகிக்கவில்லை என ரொபேட் ஓ பிளேக் அமெரிக்காவுக்கு தகவல் அனுப்பியுள்ளார். அதனைக் கைப்பற்றிய விக்கி லீக்ஸ் இது குறித்து மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், சோனியா காந்திக்கு ஆதரவாகச் செயல்படும் ஒரு ஆதரவாளர் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.


1987- 1990 காலப்பகுதியில் இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பிவைத்து ஆயிரகணக்கான தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தும் தமிழ் மக்ககளை கொன்று குவித்தது இந்திய அமைதிப்படை அப்பொழுது எம்.கே.நாராயணன் இந்திய உளவுத்துறையின் பொறுப்பதிகாரியாக இருந்தார்.  மேலும் 4 ஆம் கட்ட இறுதிப்போரை புலிகளுக்கு எதிரான போர் என்று கூறி  லட்ச கணக்கான அப்பாவி தமிழீழ பொதுமக்களை கொன்று குவித்தது சிங்கள இனவெறி அரசு அதேவேளையில் ராஜபக்சே எங்களின் போரை இந்தியா தான் பின் நின்று நடத்துகிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். அப்போது எம்.கே.நாராயணன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தமிழர்களுக்கு எதிரான போரை இந்திய காங்கிரஸ் அரசு சார்பில் நடத்தியதே எம்.கே.நாராயணன், சிவா சங்கர மேனன் ஆகியோர் தான்.  ராஜபக்சே சகோதரர்களுடன் நேரடி தொடர்பில் அவர்களுக்கு வழிகாட்டுதல் மட்டும் இன்றி, அந்த நேரத்தில் தமிழக அரசின் நாடகங்கள், கருணாநிதியின் உண்ணாவிரதம் உட்பட அணைத்து நாடகங்களுக்கும் இயக்குனராக செயல்பட்டவர் இவர். ஈழப்போர் குறித்த எந்த ஒரு செய்தியும் இந்திய ஊடகங்களில் வருவதை தடுத்து சோனியாவை காத்தவர்.  இறுதிகட்ட போர் நேரத்தில் பல்லாயிரம் தமிழர்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட போது அனைத்துலகத்தையும் வெறும் வேடிக்கை பார்க்க செய்யும் விதத்தில் ஐ.நா வரை பரவி உள்ள தன்னுடைய மலையாள அதிகார தொடர்பு வட்டத்தை வைத்து உலகத்தை ஊமையாக்கியவர்.

போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட மே 18 2009 புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டதா கவும் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும் செய்தி பரவிய அன்று சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து கை பற்றி நெகிழ்ந்தார் நாராயணன். பிறகு, தனி விமானத்தைப் பிடித்து கொழும்பு சென்றார் .

ராஜீவ் கொலை மற்றும் இந்திய அமைதிப்படை தொடர்பான பல மர்மங்களுக்கு இன்றளவும் இவர் தான் சொந்தக்காரர். இவரின் செயல்பாடுகள் பற்றி மேலும் விக்கிலீல்ஸ் செய்திகள் ஊடங்களில் வெளிவராமல் கட்டாயம் செய்துவிடுவார் என்று இவரை பற்றி நன்கு அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.