[படங்கள் இணைப்பு]6.2.2011 அன்று வட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார பொதுகூட்டம் நடைபெற்றது.

70

வட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார பொதுகூட்டம் கடந்த 6.2.2011 அன்று நடைபெற்றது.

முதல் நிகழ்ச்சியாக கருப்புக்குரல் ஸ்ரீதர் அவர்களின் பாட்டு இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து ராஜ்குமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். எட்வின் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பா.ஆனந்தராசு அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நல்லதுரை, அன்பு தென்னரசன்,பேராசிரியர் சோழன்,ஆவல் கணேசன்,கருப்புக்குரல் ஐந்து கோவிலான்,சமுத்திரா தேவி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தமிழக மீனவர் படுகொலை,பெட்ரோல் மற்றும் விலைவாசி உயர்வு,உணவுப் பொருட்களில் கலப்படம் முதலியன மக்களின் பிரச்சனையில் மெத்தன போக்கை கடைபிடிக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து நல்லதுரை அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் நாட்டில் தலைவிரித்தாடும் ஊழல் பிரச்னையை மூடி மறைக்க பார்க்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து அன்பு தென்னரசன் அவர்கள் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் பகுதி பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.