லண்டனில் முத்துக்குமார், முருகதாஸ் உட்பட்ட 19 தியாகச் சுடர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

19

இலங்கைத் தீவில் தமிழ்ர் தாயகப்பகுதிகளில் சிங்கள பேரினவாத அரசு கட்டவிழ்த்து விட்டிருந்த இனப்படுகொலைகளையும், பேரழிவுகளையும் நிறுத்தக் கோரியும், கொடிய சிங்கள பேரினவாதிகளின் அரக்கத் தனமான போரை நிறுத்தி தமிழர்களைக் காக்குமாறு சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்தும் தம்மைத் தாமே தீயிட்டு நீதிகேட்ட அந்த தியாகச் சுடர்களை நினைவு கூறும் நினைவுவணக்க நிகழ்வு லண்டனில் இடம்பெறவுள்ளது. பிரித்தானியத் தலைநகர் லண்டனின் வடகிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள Jack Cornwell Community Centre, Jack Cornwell Street, Manor Park, London, E12 5NN எனும் மண்டபத்தில் இந்த நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.

2009 ஆம் ஆண்டு தமிழர் தாயகப்பகுதிகள் மீது உக்கிர தாக்குதலை நடாத்திய இலங்கை

அரசை கண்டித்தும், சர்வதேசங்களிடம் நீதி கோரியும் தம் உடலில் தீயிட்டு உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் தீயை எரியவிட்டு தமிழின விடுதலைக்கு வலுச்சேர்த்து தியாகச் சுடர்களாகிய முத்துக்குமார், முருகதாஸ் வரிசையில் …. ரவி, இரவிச்சந்திரன், இராஜா, அமரேசன், தமிழ்வேந்தன், சிவசுப்பிரமணியம், கோகுலகிருஷ்ணன், சீனிவாசன், எழில்வளவன், ஆனந்த், இராசசேகர், பாலசுந்தரம், மாரிமுத்து, சிவானந்ன், சுப்பிரமணி, ஸ்டீவன் ஜெகதீசன் ஆகியோர் தியாக மரணமானார்கள்.இவர்களோடு தமிழர்களுக்காக முதன் முதலில் 1995 ஆம் ஆண்டு தன்னை தீக்கிரையாக்கி தியாக மரணம் அடைந்த தியாக சுடர் அப்துல் ரவூப் அவர்களையும் உள்ளடக்கி தமிழின விடுதலைக்காய் தம் உடலில் தீயியோட்டு தியாகமரணமடைந்த தியாக சுடர்களை நினைவுகொள்ளும் நினைவுவணக்க நிகழ்வே “ஈஸ்ட் ஹாம்” பகுதியில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 06-02-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களையும் வந்து கலந்துகொள்ளுமாறும், எம் இனத்தின் விடுதலைக்காய் தம் உயிர் ஈந்த அந்த அந்த அற்புத உள்ளங்களை எம் நெஞ்சங்களில் நிறுத்து மலர்வணக்கம் செலுத்த வருமாறும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முந்தைய செய்திகர்நாடக மாநில நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
அடுத்த செய்திதமிழக மீனவர் படுகொலையை கண்டுகொள்ளாத ராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி வேட்பாளரை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.