[படங்கள் இணைப்பு]நாகையில் நாம் தமிழர் கட்சியினரின் சார்பில் நடைபெற்ற முத்துக்குமார் வீரவணக்க பொதுகூட்ட நிகழ்வு.

58

ஈகி முத்துக்குமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாபெரும் வீரவணக்க பொதுக்கூட்டமும், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் தொடக்க நிகழ்வும் நாகையில் உள்ள வலிவலம் தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி திடலில் 30-1-2011 அன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக  முதலில் சிங்கள கடற்படையின்  இனவெறி  தாக்குதலில் உயிரிழந்த மீனவர் செல்லப்பன் அவர்களின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டு செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில்  பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதலாவதாக நாம் தமிழர் கட்சியின் கருப்பு  குரல் கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைநிகழ்ச்சியில் இடம்பெற்ற நாடகம் மீனவர்களின் வாழ்வினை பிரதிபலிக்கும் விதமாக அமைந்தது.இப்பொதுகூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள் வரவேற்று பேசினார். நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் தங்கள் சிறப்புரையை வழங்கிய பின்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வீர உரை நிகழ்த்தினார்.

தமிழக மீஎனவர் படுகொலையை கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்த அவர் இந்திய இலங்கை கடற்படையினர் மேற்கொள்ள இருக்கும் கூட்டு ரோந்து பயிற்சியினை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். . மேலும் சீமான் அவர்கள் பேசும் பொழுது ஈகி  முத்துகுமாரின் தியாகத்தை நினைவு கூர்ந்து தமிழ் இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய விடுதலை புரட்சியை விதைத்துள்ள அவருக்கும் வீரவணக்கம் செலுத்தினார். மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால அரசியல் திட்டத்தை குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்து சமீப காலமாக வெளிவரும் தன்  மீதான விமர்சனங்களுக்கு  தெளிவான விடை அளிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சி அ.தி.மு.க வை ஆதரிக்கவில்லை என்று கூறினார்.காங்கிரஸ் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றும் அவ்வாறு செய்யும் போது அது காங்கிரசுக்கு  எதிரணியில் இருக்கும் அ,தி,மு,க விற்கு ஆதரவாக அமைவது இயற்கையானது என்று  தெரிவித்தார்.மேலும் நான் அ.தி.மு.க வை ஆதரிப்பதாக சன் தொலைகாட்சிதான் செய்தி வெளியிட்டது என்று தெரிவித்து விளக்கம் அளித்தார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொள்ளும் பிரச்சாரத்தின் மூலம் ஒவ்வொரு தமிழர்கள் மத்தியிலும் நாம் தமிழர் கட்சி சென்று சேரவேண்டும் என்று தெரிவித்தார், மேலும் இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு தான் அஞ்ச போவதில்லை என்றும் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் தமிழ் மொழிக்காக,தமிழ் இனத்துக்காக, தமிழின விடுதலைக்காக இறுதி வரை அயராது களமாடுவேன்  என்று உறுதி கூறினார்.

இப்பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வெளியீடுகளான உயிராயுதம்,அறிவாயுதம்,மே 18 இன எழுச்சி அரசியல் மாநாட்டின் குறுவட்டு, சேலம்.அம்பத்தூர்,எம்,ஜி,ஆர் நகர் பொதுகூட்டங்களின் குறுவட்டு ஆகியன வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் தீரன், நெல்லை சிவக்குமார், மதுரை வெற்றிக்குமரன், கோவை கார்வண்ணன், தஞ்சை நல்லதுரை,மணி செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான தடா.ராசா,தூத்துக்குடிஅலைமகன்,ஆவல் கணேசன்,கோட்டைகுமார்,ரேவதி  நாகராசன்,அமுதாநம்பி,வழக்கறிஞர் கயல்விழி,அன்புத்தென்னரசன், வழக்கறிஞர்  பரசுராமன், ஐகோ,தலைமை கழக பேச்சாளர்கள் புதுக்கோட்டை ஜெயசீலன்,பேராவூரணி திலீபன், ஆகியோர்  கலந்து கொண்டனர், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் நிர்வாகிகளான வழக்கறிஞர் ராசீஎவ் காந்தி,மணி செந்தில்,கல்யாணசுந்தரம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பெங்களூரிலிருந்து பால் நியுமன், பேரறிவாளன் அவர்களின் தாயார் அற்புதம் குயில்தாசன் அம்மா, மற்றும் ஈகி முத்துகுமார் அவர்கின் தகப்பனார் குமரேசன் மற்றும் முத்துகுமார் அவர்களின் தங்கை,அவரது கணவர்,மீனவ மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவி சமுத்திரகுமாரி, ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பொது  கூட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொது மக்கள் மற்றும் மீனவ பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு]திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஈகி முத்துகுமார் அவர்களின் வீரவணக்க நிகழ்வு.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] தியாகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் – சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம்.