முகப்பு கட்சி செய்திகள்

[படங்கள் இணைப்பு] தியாகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் – சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம்.

101

ஈகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் அவருடைய நினைவிடமான கொளத்தூர் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இயக்குனர் மணிவண்ணன் உட்பட இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான தங்கராசு,ஆவல் கணேசன், அமுதா நம்பி,சுந்தரமூர்த்தி, வழக்கறிஞர் கயல்விழி, செல்வாரசு வழக்கறிஞர் மருதநாயகம்,அரிமா நாதன்,பக்தவச்சலம், மற்றும் நாம் தமிழர் கட்சியினர், தமிழின உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட சென்னை தேவா, கௌரிசங்கர், சரவணன், ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு]நாகையில் நாம் தமிழர் கட்சியினரின் சார்பில் நடைபெற்ற முத்துக்குமார் வீரவணக்க பொதுகூட்ட நிகழ்வு.
அடுத்த செய்திவடசென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதி நடத்தும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.