[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் கட்சியினர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம்.

22

பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விரோதமாக சித்திரவதைக் கூடங்களை நடத்துகின்றது. மேற்கண்ட இரண்டு முகாம்களும் இலங்கை கொடுங்கோலன் ராஜபக்க்ஷவின் மீள் குடியேற்ற முகாமினை விட மோசமாக உள்ளது. ஆடு மாடுகளை அடைக்கும் கொட்டகையை  விட மிக கேவலமாக அடிப்படை வசதிகள் ஏதுமற்ற இடத்தில் அங்கு  தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும் பூந்தமல்லியில் 4 தமிழர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும்,உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களை சட்டத்திற்குப் புறம்பாக முகாம் என்ற பெயரில் அங்கு அடைத்து வைத்துள்ளது. தற்பொழுது பூந்தமல்லியில் உள்ள தமிழர்கள் தங்களை விடுவிக்க வேண்டும் என்ற தங்கள் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி 5 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.உண்ணாவிரத போராட்டம் நடத்திய அமலன் கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரைப் பார்க்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்து விட்ட்து. இதனைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் வழக்குரைஞர் ராஜீவ் காந்தி, மருத நாயகம், தங்கராசு, சமுத்திராதேவி ஆகியோர் உட்பட நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நட்த்தினர்.