சூடான் நாட்டில் நடத்திய கருத்துக்கணிப்பு போல் தமிழீழம் குறித்தும் கருத்துகணிப்பு நடத்த வேண்டும் – டிம் மார்டின்

31

சூடானில் போன்று இலங்கையிலும் தமிழீழம் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: மனித உரிமைச் செயற்பாட்டாளர் டிம் மார்டின் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதாக தமிழீழம் என்றொரு நாடு உருவாவது தொடர்பாக இலங்கையிலும் கருத்துக் கணிப்பொன்று நடாத்தப்பட வேண்டும் என்று முன்னை நாள் தொண்டர் நிறுவனப் பணியாளர் டிம் மார்ட்டின் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.தென் சூடான் பிரிந்து செல்வது தொடர்பாக சூடானில் நடைபெற்ற கருத்துக் கணிப்புக்கு ஒப்பாக இலங்கையின் தமிழ்ப்பிரதேசங்கள் தனிநாடாக அமைவது தொடர்பான கருத்துக் கணிப்பும் நடாத்தப்பட வேண்டும் என்பதே டிம் மார்டின் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திடம் விடுத்த வேண்டுகோளாகும்.
ஐ.நா. செயலாளர் நாயகம் அண்மையில் லண்டனுக்கு விஜயமொன்றை மேற்கொண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய சந்தர்ப்பத்திலேயே அவர் மேற்கண்ட வேண்டுகோளை முன் வைத்துள்ளார்.
ஆயினும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் டிம் மார்ட்டினின் கோரிக்கை தொடர்பில் சாதகமான பதிலளிக்காது தவிர்த்துக் கொண்டுள்ளார். அதனையடுத்து பான் கீ மூன் இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமாக செயற்படுவதாகக் குற்றம் சாட்டிய டிம் மார்டின், பான் கீ மூனுக்கெதிராக துண்டுப் பிரசுரம் ஒன்றையும் விநியோகித்துள்ளார்.
எக்ட் நவ் தொண்டர் நிறுவனத்தின் முக்கியஸ்தரான டிம் மார்டின் இலங்கையிலும் தொண்டர் நிறுவனச் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தவராவார். விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் ஆரம்ப கட்டத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் கட்சியினர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் திருப்பூர் மாவட்ட களப்பணி ஒருங்கிணைப்பாளர் அழகப்பன் அவர்களின் தகப்பனார் மறைவு – நாம் தமிழர் கட்சி இரங்கல்.