“தமிழ்நாட்டின் எதிர்ப்பு இரண்டே நாளில் முடிந்து விடும், இதையெல்லாம் பெரிதாக எடுக்க தேவையில்லை” – இலங்கை ஊடக தலைவர் திமிர் பேச்சு

29


இன்று தமிழக மீனவர் ஜெயக்குமார் சிங்கள இனவெறி கடற்படையால் கழுத்தில் சுருக்கிட்டு படுகொலை சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை தேசிய பாதுகாப்பு மையத்தின் ஊடக தலைவர் லஷ்மன் ஹுலுகல்ல, தமது கடற்படைக்கும் இந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் கிளம்பும் எதிர்ப்பு அரசியல் அடிப்படையை கொண்டது அரசியல் விடயங்களை இதில் கொண்டு வரக்கூடாது. தமிழ் நாடு அரசு இது குறித்து அறிக்கை வெளியிட வேண்டியது அங்குள்ள சூழ்நிலையின் கட்டாயம். யாரும் இந்த விடயங்களை நிருபிக்கவில்லை. சில சம்பவங்கள் நடந்துள்ளன. அது குறித்து ஆதாரம் இருந்தால் அதை நிருபிக்கலாமே. அல்லது எங்களிடம் தரலாமே. இவர்கள் செய்யும் அரசியல் ஆர்பாட்டங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளமுடியாது. இரண்டு நாட்களில் இதெல்லாம் முடிந்து விடும். ஏனென்றால் இதை செய்வது அரசியல்வாதிகள். ஆனால் இந்தப் பிரச்சனை அரசியல் பிரச்சனையல்ல என்றும் ஹுலுகல்ல தெரிவித்தார்.

இலங்கை ஊடக தலைவரின் இந்த திமிர் பேச்சுக்கு காரணம் இங்குள்ள மத்திய மாநில அரசியல்வாதிகளின் வழக்கமான கண்துடைப்பு நாடகங்கள் தான் என்று நடுநிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முந்தைய செய்திஅழைப்பு : தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றிய விழிப்புணர்வு கூட்டம் – பெங்களுரு நாம் தமிழர்
அடுத்த செய்திசென்னையில் இலங்கை வீரர் ஜெயசூர்யா விளையாடும் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிடுவோம்-சீமான்.