[2 ஆம் இணைப்பு – படங்கள் காணொளி இணைப்பு]ராஜபக்சே கொடும்பாவி எரித்த திருப்பூர் நாம் தமிழர் கட்சியினர் கைது

25

[2 ஆம் இணைப்பு படங்கள் காணொளி இணைப்பு] தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் அவர்கள் தலைமையில் மோகன், கௌரிசங்கர் அவர்கள் முன்னிலையில் இன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் தொடர்ந்து  இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இதை கண்டிக்காத மத்திய மாநில அரசை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன பின் ராஜபக்சே கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் அவர்கள் தலைமையில் மோகன், கௌரிசங்கர் அவர்கள் முன்னிலையில் இன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் தொடர்ந்து  இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இதை கண்டிக்காத மத்திய மாநில அரசை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன பின் ராஜபக்சே கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 நாம் தமிழர் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினர்

செல்வம்

கௌரி சங்கர்

சிவகுமார்

வான்மதி வேலுச்சாமி

ராஜேசு கண்ணா

பரமசிவம்

தமிழன் வடிவேல்

குணா

ரவிச்சந்தர்

காந்தி

சத்யமூர்த்தி

அழகிரி – திருவளூர் மாவட்டம் .