மீனவர் படுகொலையை கண்டித்து ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு – திருப்பூர் நாம் தமிழர் கைது.

29

தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் அவர்கள் தலைமையில் மோகன், கௌரிசங்கர் அவர்கள் முன்னிலையில் இன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் தொடர்ந்து  இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இதை கண்டிக்காத மத்திய மாநில அரசை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன பின் ராஜபக்சே கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 நாம் தமிழர் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

முந்தைய செய்திதமிழக தமிழர்களின் உதவியைத்தான் ஈழத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்- வழக்கறிஞர் கயல்விழி
அடுத்த செய்திSL navy kills 539th another TN fisherman today 23 01 11 flv